பிரிவினைவாதிகளை பிளந்துகட்டிய முடிவு - முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் சுளீர் ட்விட்.!
பிரிவினைவாதிகளை பிளந்துகட்டிய முடிவு - முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் சுளீர் ட்விட்.!
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் முடிவு ஆகியவை குறித்து பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7ம் தேதி) நாட்டு மக்களிடையே உரையாற்ற இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ``சிறப்பு அந்தஸ்து பிரிவினைக்கு வழிவகுத்தது. இந்தியா ஒரு வலிமையான தேசம். இதுபோன்ற அபத்தங்கள் இனியும் தொடராது. சிறப்பு அந்தஸ்து ஒரு தற்காலிக முடிவு. அதையே நிரந்தர முடிவாக எண்ணக்கூடாது. பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றிகள். பெரும் வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.