ரவீந்திரநாத் எம்.பி வைத்த ஒரு கோரிக்கை! 37 எம்.பி களின் வாயை அடைத்தது

ரவீந்திரநாத் எம்.பி வைத்த ஒரு கோரிக்கை! 37 எம்.பி களின் வாயை அடைத்தது

Update: 2019-08-07 06:45 GMT


காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்தது. பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ரவீந்திரநாத் குமார் கூறியதாவது:-


1984-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாநிலங்களவையில் பேசியபோது, “ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைக்கபட வேண்டும். ஏன் அது இன்னமும் தாமதம் ஆகிறது” என்று குறிப்பிட்டார்.


இன்று நம் பாரத பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஜெயலலிதாவின் கோர்க்கைய நிறைவேற்றியுள்ளனர். அதற்காக எங்களின் முழுமையான நன்றியை அ.தி.மு.க. சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த மசோதா மூலமாக ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும். சுதந்திர கதவை திறந்து விட்டீர்கள். அவர்கள் இந்திய மண்ணில் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.


சில அரசியல் ஆதாயத்திற்காக 1974-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு கச்சத்தீவை தமிழகத்தில் இருந்து பிரித்து இலங்கைக்கு கொடுத்துவிட்டது. அவர்கள் அரசியல் லாபத்திற்காக அங்கே ஜம்மு-காஷ்மீரின் உரிமையை இந்தியாவில் இருந்து பிரித்தது போல, இங்கு தமிழ்நாட்டிலிருந்து பிரித்து விட்டார்கள். தமிழ்நாட்டின் உரிமையான கட்சத்தீவை மீண்டும் தமிழ்நாட்டிற்கு பெற்றுத்தர வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன். 


நமது பிரதமரின் புதிய இந்தியாவில், இந்த ஜம்மு-காஷ்மீரின் மசோதா ஒரு மைல்கல்லாக அமையும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இது இருக்கும்.




https://www.youtube.com/watch?v=X2SvmVfnACI&feature=youtu.be


இவ்வாறு ரவீந்திரநாத் பேசினார்.


அப்போது அவையில் இருந்த தி.மு.க. கூட்டணி எம்.பிகளில் ஒருவர் கூட இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தமிழன் உரிமை சார்ந்த பிரச்சினைக்கு பாராளுமன்றத்தில் ரவீந்திரநாத் குரல் எழுப்பியபோது, தங்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்பதுபோல அமர்ந்து இருந்து வேடிக்கை பார்த்ததுதான், தி.மு.கவின் அகராதியில் தமிழனின் உரிமை போலும்.


தனி ஒருவனாக ரவீந்திரநாத், “கச்சத்தீவை மீட்டுத்தாருங்கள்” என்று பாராளுமன்றதில் குரல் எழுப்பியபோது, பாராளுமன்றத்தில், தி.மு.க கூட்டணியை சேர்ந்த 37 எம்.பிகள் இருந்தனர். அவர்கள் அனைவருமே முதுகெலும்பு இல்லாதவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர் என்கின்றனர் தமிழக மக்கள்.


Similar News