டெல்லி பல்கலைக்கழகம் மாணவர் சங்க தேர்தல் - 4 ல் 3 இடங்களை கைப்பற்றிய பாஜக ஆதரவு அமைப்பு.!
டெல்லி பல்கலைக்கழகம் மாணவர் சங்க தேர்தல் - 4 ல் 3 இடங்களை கைப்பற்றிய பாஜக ஆதரவு அமைப்பு.!
டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் பாஜக ஆதரவு அமைப்பான ஏ.பி.வி.பி. 4ல் 3 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், தலைவர், துணைத்தலைவர், இணைச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்புகளை ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபி வென்றது. செயலாளர் பொறுப்பை காங்கிரசின் மாணவர் அமைப்பு வென்றது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் மாணவர் சங்கத்தில் உள்ள 4 பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 40 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
மாணவர் சங்க தேர்தலில் தலைவர், துணை தலைவர், கூடுதல் செயலர் ஆகிய பதவிகளை பா.ஜ.க. ஆதரவு பெற்ற அகில பாரதிய வித்யார்த்தி பரஷத் அமைப்பு கைப்பற்றியது.
அந்த அமைப்பின் அக்ஷித் தஹியா தலைவர் பதவியையும், துணை தலைவர் பதவியை பிரதீப் தன்வாரும், கூடுதல் செயலாளர் பதவியை ஷிவாங்கி கர்வாலும் கைப்பற்றினர்.
காங்கிரஸ் ஆதரவு பெற்ற என்.எஸ்.யு.ஐ. அமைப்பின் ஆஷிஸ் லம்பால் செயலாளர் பதவியை கைப்பற்றினார்.