“நடிகர் விஜய் உண்மையை பேச வேண்டும்” - பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுரை!!

“நடிகர் விஜய் உண்மையை பேச வேண்டும்” - பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுரை!!

Update: 2019-09-24 07:12 GMT


காஞ்சிபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


கடந்த முறை, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான  5 ஆண்டுகால ஆட்சி சிறப்பாக நடைபெற்றது. அதேபோல இந்த ஆட்சியில் கடந்த 100 நாட்களில் அதைவிட பல மடங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


நடிகர் விஜய், இந்த நாட்டின் குடிமகன். அவரும் அரசியல் கருத்துக்களை தாராளமாக கூறலாம். அவர் அரசியல் கருத்துக்களை கூறக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், அரசியலில் உண்மையான கருத்துக்களை கூற வேண்டும். யார் உண்மையை சொன்னாலும் அதை நாங்கள் வரவேற்போம்.


அப்படி உண்மையான கருத்துக்களை சொல்லவில்லை என்றால், அவர்களின் மனசாட்சி அவர்களை உறுத்தும். இது நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்தும்.


இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


Similar News