உயிருடன் இருக்கும் போதே நடிகை ரேகா செய்த இறுதி முன்னேற்பாடு! கலை உலகினர் அதிர்ச்சியுடன் நெகிழ்ச்சி!
உயிருடன் இருக்கும் போதே நடிகை ரேகா செய்த இறுதி முன்னேற்பாடு! கலை உலகினர் அதிர்ச்சியுடன் நெகிழ்ச்சி!
இயக்குநர் பாரதிராஜாவின் ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் அறிமுகமான ரேகா தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிறமொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.
அண்மையில் படங்களில் நடிக்காமல் இருந்த ரேகா, தற்போது சில குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு நேர்காணலில் தன் மனதில் உள்ளவற்றை பகிர்ந்துள்ளார். தான் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டும்தான் தனது தந்தை பார்த்துள்ளார் என்றும் சினிமாவில் நடிப்பது தந்தைக்கு பிடிக்காது என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், அதற்குக் காரணம் தன் மீது அவர் வைத்திருந்த அதிக அன்பும் அக்கறையும்தான் என்றார் ரேகா.
தந்தையின் மறைவுக்குப் பின் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அவருக்கு ஒரு கல்லறை எழுப்பியதாகவும், அவரை அடக்கம் செய்த இடத்தில் மற்றவர்கள் யாரையும் அடக்கம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டிருக்கிறார். இறந்த பின், தந்தையார் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்று ரேகா விருப்பம் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கும், கலி உலகத்தினருக்கும் அதிர்ச்சி அளித்தாலும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது என்று சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.