370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் காஷ்மீரில் ஒருவர் கூட துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழக்கவில்லை! ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்!

370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் காஷ்மீரில் ஒருவர் கூட துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழக்கவில்லை! ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்!

Update: 2019-11-23 09:13 GMT

லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கொள்கையில் இருந்து பாஜக ஒருபோதும் விலகுவதில்லை என்றும், கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் பாஜக அரசு நிறைவேற்றும் என்றும் கூறினார். பாஜகவும் மோடி தலைமையிலான அரசும் மக்களின் நம்பிக்கையை எப்போதும் இல்லாத அளவில் பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரம் மற்றும் அயோத்தி விவகாரத்தில் உலக நாடுகள் இடையே ஆதரவு திரட்ட முயற்சிப்பதாகவும் ஆனால் அமெரிக்கா, அரபு நாடுகள் உட்பட உலக நாடுகள் இந்தியாவின் நிலையை ஆதரிப்பதாகக் கூறினார்.


பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ள இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தைத் இப்போது கூட தூண்டி வருவதாக கூறினார் .


இந்தியாவில் 2025ம் ஆண்டுக்குள் 20 முதல் 25 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதற்காக சுமார் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படுவதாகவும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.


அப்போது 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு பின்னர், போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கூட காஷ்மீரில் உயிரிழக்கவில்லை எனவும் கூறினார்.


https://navbharattimes.indiatimes.com/metro/lucknow/politics/not-a-single-person-died-in-police-firing-in-jammu-kashmir-after-removal-of-article-370-


Similar News