அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: விக்கிரவாண்டி - எம்.ஆர்.முத்தமிழ் செல்வன்; நாங்குநேரி - வெ.நாராயணன்!!
அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: விக்கிரவாண்டி - எம்.ஆர்.முத்தமிழ் செல்வன்; நாங்குநேரி - வெ.நாராயணன்!!
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டியில் எம்.ஆர்.முத்தமிழ் செல்வன் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர், விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றிய அதிமுக செயலாளர் ஆவார். நாங்குநேரியில் வெ.நாராயணன் போட்டியிடுகிறார். இவர் நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக உள்ளார்.
திமுக சார்பில் விக்கிரவாண்டியில் புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சியினர் வழக்கம்போல சட்டையை கிழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.