அஜய் தாகூரின் அதிரடி ரெய்டுடால்!! தமிழ் தலைவாஸ் சூப்பர் வெற்றி!!

அஜய் தாகூரின் அதிரடி ரெய்டுடால்!! தமிழ் தலைவாஸ் சூப்பர் வெற்றி!!

Update: 2019-08-14 10:51 GMT

புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 34–28 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத்தை வென்றது.


நேற்று ஆமதாபாத்தில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, குஜராத்தை எதிர்கொண்டது. துவக்கத்தில் குஜராத் ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியின் கடைசி நேரத்தில் ‘ரெய்டு’ சென்ற கேப்டன் அஜய் தாகூர், 4 புள்ளிகள் பெற்று தர, குஜராத் ஆல் அவுட்டானது. தமிழ் தலைவாஸ் 15–10 என முன்னிலை பெற்றது.


இரண்டாவது பாதியில் 23–15 என இருந்த தமிழ் தலைவாஸ், பின் 25–26 என பின்தங்கியது. போட்டி முடிய 2 நிமிடங்கள் இருந்த போது ‘ரெய்டு’ சென்ற அஜய் தாகூர், 3 புள்ளிகள் பெற்று தர, 29–26 என தமிழ் தலைவாஸ் முன்னிலை பெற்றது. தொடர்ந்து குஜராத் ஆல் அவுட்டானது.


முடிவில் தமிழ் தலைவாஸ் அணி, 34–28 என்ற கணக்கில் சூப்பர் வெற்றி பெற்றது. இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 3ல் வென்ற (2 தோல்வி, 1 ‘டை’) தமிழ் தலைவாஸ் அணி, 20 புள்ளிகள் பெற்று, பட்டியலில் 8வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறியது.


Similar News