ஊடகங்களின் வருவது பொய்,அஜித் பவார் வழக்குகள் திரும்பப் பெறவில்லை - அமித்ஷா!
ஊடகங்களின் வருவது பொய்,அஜித் பவார் வழக்குகள் திரும்பப் பெறவில்லை - அமித்ஷா!
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மாநாடு நடைபெற்று வருகிறது, மாநாட்டில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார் அதேவேளையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு நேரலை விவாதத்தில் கலந்து கொண்டார், அப்போது பேசிய அமித்ஷா அஜித் பவாரின் வழக்குகள் எதுவும் திரும்ப பெறவில்லை என தெரிவித்தார், உங்களுக்கும் தேசியவாத காங்கிரசு அஜித் பவாரி ஒத்துவராது இருப்பினும் என் கூட்டணி வைத்தீர்கள் என்று கேள்விக்கு நாங்கள் எதுவும் அவரிடம் சொல்லவில்லை அவர்கள்தான் எங்களிடம் வந்தார், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இன் சட்டமன்றத் தலைவர் அவர்தான் கடிதத்தை எடுத்து வந்து கவர்னரிடம் கொடுத்தார் என்று அமித்ஷா தெரிவித்தார்.
எங்கள் சித்தாந்தத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம், எப்போதும் நாங்கள் மாற்றியது இல்லை, சிவசேனா கட்சித்தலைவர் அயோத்திக்கு செல்லவிருப்பதாக தெரிவித்தார் ஆனால் அவர் செல்லவில்லை, தங்களது நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம், நாங்கள் ஒருபோதும் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.