உலக கோப்பை, நாடாளுமன்ற தேர்தலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அஜித்- ஆதிக்கம் செலுத்தும் ரசிகர்கள் !
உலக கோப்பை, நாடாளுமன்ற தேர்தலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அஜித்- ஆதிக்கம் செலுத்தும் ரசிகர்கள் !
ட்விட்டர் என்றாலே ஹேஷ்டேக் தான் அதை அறிமுகப்படுத்தி 12 ஆவது ஆண்டு ஆகஸ்ட் 23 கொண்டாடப்பட்டது. இதையொட்டி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் 2019 ஆண்டின் முதல் அரையாண்டு வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் ஜனவரி 1, 2019 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #Viswasam முதலிடம் பிடித்தது. தமிழ் சினிமா திரைப்படமான விஸ்வாசம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. இந்த திரைப்படம் பற்றிய விவரங்கள் ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்தியிருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அஜித் இல்லை என்றாலும் அவரின் ரசிகர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
உலக கோப்பை எனும் மிகப்பெரிய போட்டி நடந்தது அது மட்டுமில்லாமல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இவை அனைத்தையும் பின்னுக்கு தள்ளி விஸ்வாசம் முதலிடம் பெற்றிருப்பது அஜித்தா மேல் ரசிகர்கள் கொண்டிருக்கும் விசுவாசமே காரணம். அவர்கள் தான் சமூக வலைத்தளங்களின் ராஜா என்பதை நிரூபித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அரசியல் மற்றும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய ட்விட்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. அதில் இந்த ஆண்டு முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #LokSabhaElections2019 இரண்டாவது இடம்பிடித்துள்ளது. இந்த ஹேஷ்டேக் கொண்டு சமீபத்தில் நடந்து முடிந்த பொது தேர்தல் பற்றிய விவரங்கள் பகிரப்பட்டன.
மூன்றாவது இடத்தில் #CWC19 இருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பற்றிய இந்த ஹேஷ்டேக்கினை ட்விட்டர் வாசிகள் அதிகம் பயன்படுத்தினர். இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமா திரைப்படமான மகரிஷி #Maharshi எனும் ஹேஷ்டேக்கில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பட்டியலில் நான்கவது இடம்பிடித்துள்ளது.
ஐந்தாவது இடத்தில் #NewProfilePic எனும் ஹேஷ்டேக் இடம்பெற்றது. இதனை புதிய புகைப்படத்தை ப்ரோஃபைல் படமாக தேர்வு செய்வோர் பொதுவாக பயன்படுத்தியிருக்கின்றனர்.
ஹேஷ்டேக் எனும் அம்சம் ட்விட்டரில் 12 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதை கொண்டு ஒருபிரிவு சார்ந்த விவரங்களை தனியாக பிரிக்க முடியும்.