புழல் ஜெயிலில் அல் உம்மா பயங்கரவாதிகள் அட்டூழியம்! சிறை கண்காணிப்பாளருக்கு அடி-உதை!!
புழல் ஜெயிலில் அல் உம்மா பயங்கரவாதிகள் அட்டூழியம்! சிறை கண்காணிப்பாளருக்கு அடி-உதை!!
இந்து இயக்க தலைவர்களை கொலை செய்தது உள்பட பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட, அல் உம்மா முஸ்லிம் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் இருவரும் புழல் சிறை - அலகு 1 உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சிறை கைதிகளுக்கு ஒவ்வொரு வாரமும் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படும்.
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக்கும் கலந்துகொள்வதில்லையாம். அந்த அளவிற்கு புழல் ஜெயிலில் முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு அதிகாரம் கொடிகட்டி பறந்துள்ளது.
இந்த நிலையில், கைதிகளுக்கான குறை தீர்ப்பு முகாமில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரிடம் கேட்பதற்காக, உயர் பாதுகாப்பு பிரிவுக்கு சிறைக்கு சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் சென்றுள்ளார். அவரை முஸ்லிம் பயங்கரவாதி பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் ஒருமையில் பேசியுள்ளான்.
இதனால் அவர்களை செந்தில் குமார் எச்சரித்துள்ளார். இதனையடுத்து பன்னா இஸ்மாயில், சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரை கீழே தள்ளி அடித்துள்ளான். சூழ்நிலை மோசமாவதை உணர்ந்த மற்ற காவலர்கள் செந்தில் குமாரை காப்பாற்றி உள்ளனர்.
இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார், புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில் பன்னா இஸ்மாயில் தன்னை தாக்கியதாக செந்தில்குமார் குறிப்பிட்டுள்ளார்.