அனைத்து விவகாரங்கள் குறித்தும் குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க அரசு தயார் - பிரதமர் நரேந்திர மோடி

அனைத்து விவகாரங்கள் குறித்தும் குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க அரசு தயார் - பிரதமர் நரேந்திர மோடி

Update: 2019-11-18 05:03 GMT

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி, அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத் தொடரில் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்  மசோதா, தனிநபர் மசோதா, உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நேற்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிர் ரஞ்சன் செளத்ரி, குலாம் நபி ஆஸாத், சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். கடந்த கூட்டத் தொடர் போல குளிர்கால கூட்டத் தொடரும் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.


Similar News