அத்தனை புகழும் அத்வானிஜிக்குதான்! முதல் மரியாதை செய்த உமாபாரதி!

அத்தனை புகழும் அத்வானிஜிக்குதான்! முதல் மரியாதை செய்த உமாபாரதி!

Update: 2019-11-09 11:25 GMT


அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவிலை கட்டுவதற்கான அனுமதியை வழங்கி உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன்பகவத் உட்பட தலைவர்கள் தங்கள் கருத்தை கூறியுள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களும் இந்த தீர்ப்புக்கு வரவேற்பளித்துள்ளனர்.


இந்த நிலையில் பாஜகவின் மூத்த பெண் தலைவர்  உமா பாரதி  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றார். "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெய்வீக தீர்ப்பு இது வரவேற்கத்தக்கது" என்று பாரதி ட்வீட் செய்துள்ளார்.


மேலும் அவர்,"இந்த வேலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த அனைவருக்கும் ஒரு மரியாதை செலுத்திய அவர் முக்கியமாக மூத்த தலைவர் அத்வானி ஜிக்கு ஒரு முக்கிய அஞ்சலி என்றும், அவருடைய  தலைமையின் கீழ் இந்த மகத்தான பணிக்காக நாம் அனைவரும் நம்மால் முடிந்தவரை பணயம் வைத்தோம் ," என்றும்  கூறினார். மேலும், விஸ்வ இந்து பரிஷத்தின் (வி.எச்.பி) முன்னாள் சர்வதேச தலைவர் அசோக் சிங்கலுக்கும் அவர் மரியாதை செலுத்தினார். இவர்கள் அனைவருக்கும் இந்த பெருமை செல்ல வேண்டும் என்றார்.


Similar News