70% மக்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த அமெரிக்கா !

70% மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி இலக்கை அடைந்த அமெரிக்கா.

Update: 2021-08-03 13:10 GMT

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. முதல் அலையின் போது பல்வேறு மக்களை கொரோனா பாதித்த முதல் நாடாகவும் அமெரிக்க திகழ்ந்து வந்தது. அங்கு கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பாதிப்புகளின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. 


2021 ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் அவர்கள். தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேலும் துரிதப்படுத்தினார். அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை-4 தேதிக்குள் அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்தார். அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வந்தது.


ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை ஜூலை 4 ஆம் தேதிக்குள் அடையவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில், 18 வயதுக்கு மேற்பட்ட 70% பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி டோஸ் செலுத்தும் இலக்கை நேற்று எட்டியுள்ளது. அமெரிக்காவில் பெரியவர்களில் 60.6% பேருக்கும், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 49.7% பேருக்கும் முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input: https://www.cnbc.com/2021/08/02/covid-vaccine-us-reaches-bidens-70percent-goal-for-adults-a-month-behind.html

Image courtesy: CNBC news


Tags:    

Similar News