மருத்துவமனையை சுத்தம் செய்த அமித்ஷா!!

மருத்துவமனையை சுத்தம் செய்த அமித்ஷா!!

Update: 2019-09-14 06:17 GMT


பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் வரும் 17-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒருவார காலம் “சேவை வாரம” ஆக கொண்டாட பா.ஜ.க முடிவு செய்தது. 
அதன்படி பா.ஜ.கவினர் பல்வேறு பகுதிகளில் தூய்மைப்பணி மற்றும் சமூக சேவை தொடர்பான பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  


இந்த சேவை வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பா.ஜ.க தலைவர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தரையை சுத்தம் செய்தார். அமித்ஷாவுடன் பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா, விஜய் கோயல், விஜேந்தர் குப்தா உள்ளிட்ட நிர்வாகிகளும் மருத்துவமனையில் தரையை சுத்தம் செய்தனர்.





பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சந்தித்து, அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பழங்கள் வழங்கி மகிழ்வித்தனர்.  


இது பற்றி அமித்ஷா கூறும்போது, “பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பா.ஜ.க தொண்டர்கள் சேவை வார கொண்டாட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர். நமது பிரதமர் நரேந்திர மோடி, நாட்டிற்கு சேவை செய்வதற்காகவும், ஏழைகளுக்கு பணியாற்றவும் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளார். அதனால், அவரது பிறந்த வாரத்தை சேவை வாரமாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்கும்” என்றார்.




https://twitter.com/AmitShah/status/1172731609922981888

Similar News