அயோத்தி வழக்கு விவகாரத்தில் அமித் ஷா மேற்கொண்ட துணிகர நடவடிக்கை - இந்தியா முழுவதும் 'கப் சிப்' : அமைதியை நிலைநாட்டிய பின்னணி.?
அயோத்தி வழக்கு விவகாரத்தில் அமித் ஷா மேற்கொண்ட துணிகர நடவடிக்கை - இந்தியா முழுவதும் 'கப் சிப்' : அமைதியை நிலைநாட்டிய பின்னணி.?
முக்கியமான இரு மதங்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு வருவது தெரிந்து, முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக நாடு முழுவதிலும் அமைதியை நிலைநாட்டியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
அயோத்தியில் 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்டனர். அதே போல இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தீர்ப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் விடுப்பில் இருந்த காவலர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டனர்.
இந்தியா முழுவதிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அயோத்தி தீர்ப்பு வெளியான தினத்தில் நடக்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு பாதுகாப்பு விசயத்தில் கவனம் செலுத்தினார் அமித் ஷா.
கட்சி பேதம் பார்க்காது, பதற்றமான மாநிலங்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை அழைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்தார்.
எங்காவது விரும்ப தகாத நிகழ்வுகள் நடந்தால், உடனே தகவல் தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார். மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குனர் ஆகியோரை பலமுறை சந்தித்து நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அதற்கேற்ப மாநிலங்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதனால் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வெளியான போதும் கூட, எவ்வித அசம்பாவிதமும் இன்றி நாடு முழுவதிலும் அமைதி நிலவுகிறது.