டெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் ஏ.பி.வி.பி அபார வெற்றி!!

டெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் ஏ.பி.வி.பி அபார வெற்றி!!

Update: 2019-09-13 11:22 GMT


டெல்லி மாநிலத்தில் உள்ள பெரும்பாலன கல்லூரிகள், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு கல்லூரிகளாக இயங்கி வருகின்றன. இந்த பல்லைக்கழகத்தின் மாணவர் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது.


தலைவர், துணைத் தலைவர், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 52 கல்லூரிகளை சேர்ந்த 1.44 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் வாக்களித்தனர்.


பா.ஜ.க ஆதரவு மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி, காங்கிரஸ் ஆதரவு மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ, இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிட்டனர்.





நாட்டில் நடக்கும் பொதுத் தேர்தல்களை போலவே இந்த தேர்தலிலும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.


வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தொடக்கம் முதலே, ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பு முன்னிலை வகித்து வந்தது.


அது தலைவர் உட்பட 3 முக்கிய பதவிகளை கைபற்றியது.


தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலாளர் உள்ளிட்ட 3 முக்கிய பதவிகளை ஏ.பி.வி.பி கைபற்றி சாதனை படைத்தது. என்.எஸ்.யு.ஐ செயலாளர் பதவியை கைபற்றியது.


தலைவர் பதவிக்கு ஏ.பி.வி.பி சார்பில் போட்டியிட்ட அஷ்வித் தஹியா, என்.எஸ்.யு.ஐ வேட்பாளர் சேத்தனா தியாகியைவி 19 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.


இதேபோல, துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஏ.பி.வி.பி.யின் பிரதீப் தன்வர், இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஷிவாங்கி கார்வல் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.


Similar News