அயோத்தி தீர்ப்பில் திருப்பத்தை ஏற்படுத்திய தொல்லியல் ஆய்வு முடிவு !
அயோத்தி தீர்ப்பில் திருப்பத்தை ஏற்படுத்திய தொல்லியல் ஆய்வு முடிவு !
70 ஆண்டுகள் பழமை வாய்ந்த வழக்கிற்கு இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. உத்திர பிரதேச மாநில அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு பல வருடங்களாக நடைபெறுகிறது. இந்த நிலத்தை 3 அமைப்பினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். மூன்று பெரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அலகாபாத் நீதி மன்றம் 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து 3 அமைப்பினரும் உச்ச நீதி மன்றம் சென்றனர்.
இன்று தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். அதில் சர்ச்சைக்குரிய நிலம் ராம் லல்லா என்ற அமைப்பிற்கு வழங்கப்படவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்புவழங்கியது. இதற்காக ஒரு அறக்கட்டளையை அரசு உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் திருப்பத்தை ஏற்படுத்தியது தொல்லியல் ஆய்வு முடிவு.
சர்ச்சைக்குரிய இடத்தில் தொல்லியல்துறை ஆய்வுகள் நடத்தி இருந்தது. அந்த ஆய்வில் பாபர் மசூதியை ஏற்கனவே காலியாக இருந்த இடத்தில் கட்டப்படவில்லை, மசூதி கட்டப்பட்ட இடத்தின் கீழே ஏற்கனவே கோயில் இடிபாடு இருந்ததை தொல்லியல்துறை ஆதாரங்களுடன் நிரூபித்து விட்டது. மசூதியின் அடியில் கண்டெடுக்கப்பட்ட அந்த கட்டுமானம் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் இல்லை என்பதும் ஆதாரங்களுடன் நிரூபணமாகிவிட்டது. ஆனால் கீழே இருந்தது எந்த தெய்வத்திற்கான கோவில் என்று தொல்லியல் துறையால் நீர்பிக்க முடியவில்லை.
இருப்பினும் ராமர் பிறந்தது அயோத்தி என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மத நம்பிக்கை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையாகும். 1855 ஆம் ஆண்டுவரை சர்ச்சைக்குரிய உள்பகுதி வரை இந்துக்கள் சென்று வந்துள்ளது நிரூபிக்கபட்டுள்ளதால் இப்படி தீர்ப்பு வந்துள்ளது