இனி எல்லைப் பகுதிகள் பயங்கரவாதிகளுக்கு ஒரு போதும் புகலிடமாக இருக்காது! 'நவீன பாதுகாப்பு' திறன் குறித்து இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்!

இனி எல்லைப் பகுதிகள் பயங்கரவாதிகளுக்கு ஒரு போதும் புகலிடமாக இருக்காது! 'நவீன பாதுகாப்பு' திறன் குறித்து இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்!;

Update: 2020-02-28 10:37 GMT

எல்லைப் பகுதிகள் இனி பயங்கரவாதிகளுக்கு ஒருபோதும் பாதுகாப்பான இடங்களாக இருக்காது என்பதை தெளிவாக இந்திய இராணுவம் தெளிவாக உணர்த்தியுள்ளதாகவும், இதை பாகிஸ்தான் பாலக்காட் சம்பவம் மூலம் எதிரிகள் புரிந்து கொண்டதாகவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வான் சக்தி ஆய்வுகள் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்" பாலகோட் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு ஒரு மிக சிறப்பான பாடத்தை இந்தியா கற்பித்துள்ளது. ஏனெனில் இந்திய எல்லை பகுதிகள் இனி பயங்கரவாதிகளுக்கு ஒருபோதும் பாதுகாப்பான இடம் அல்ல என்பதை நமது இராணுவம் தெளிவாக உணர்த்தியுள்ளதாகவும் கூறினார்.

மேலும், கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்பு மற்றும் போர் புரியும் முறை என்பது முற்றிலும் நவீனமயமாகி ஹைபிரிட் போர் எனப்படும் நவீன முறைக்கு மாறிவிட்டதாகவும், அவ்வாறு மாறிவிட்ட இந்த போர் முறையில் தெளிவான தொடக்கமோ முடிவோ இல்லை எனவும் எப்போது அவர்கள் ஊடுருவுகிறார்களோ அப்போது நம் நவீன துருப்புக்கள் எல்லை கடந்து உள்ளே புகுந்து எதிரிகளை துவம்சம் செய்துவிட்டு கண நேரத்தில் திரும்பி வந்து விடும் என குறிப்பிட்டார்.

இதற்கு முன்னுதராணமாக திகழ்ந்தது இதனிடையே பாலகோட் வான்வழி தாக்குதல்தான் என்றும், இந்த தாக்குதல் மூலம் பயங்கரவாதத்தின் மீது இந்தியா கொண்டுள்ள தீர்கமான உறுதி, தீர்மானம், திறனை எதிரிகளுக்கு காட்டியுள்ளதாக அவர் கூறினார்.

https://economictimes.indiatimes.com/news/defence/balakot-airstrikes-sent-out-clear-message

Similar News