100 நாள் வேலை நிதியை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை- மத்திய அரசு எச்சரிக்கை!
100 நாள் வேலை திட்டம் நிதியை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவையில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.;

மக்களவையில் சிரோமணி அகலிதள எம். பி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் பேசுகையில் , 100 நாள் வேலை திட்ட நிதியை பஞ்சாப் உட்பட பல மாநிலங்கள் தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். பஞ்சாயத்துகள் மூலம் நிதி வழங்குவதற்குப் பதிலாக மாநில அரசுகள் அவற்றைத் திருப்பிவிட்டு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார். வேளாண்துறை மந்திரி சிவராஜ் சவுகான் அறிவித்தார்-
100 நாள் வேலை திட்ட நிதியை தவறாக பயன்படுத்தினாலோ அந்த திட்டத்தை அமல்படுத்திய விதிமுறைகளை சரியாக பின்பற்றாவிட்டாலோ விதிகளை மீறினாலோ அது பற்றி விசாரிக்க குழுக்களை அனுப்பி வைப்போம். தவறு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். முன்னதாக கேள்வி நேரத்தில் 100 நாள் வேலை திட்டம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி புகார் கூறினார். அவர் பேசியதாவது:-
மேற்கு வங்காளத்துக்கான 100 நாள் வேலைத்திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்திவிட்டது. 25 லட்சம் போலி வேலை வாய்ப்பு அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய அரசு காரணம் கூறுகிறது. அப்படியானால் விசாரணை நடத்தி கைது செய்யுங்கள். 25 லட்சம் முறை கேடுகளுக்காக 10 கோடி மக்களுக்கான நிதியை எப்படி நிறுத்தலாம்? இவ்வாறு அவர் கூறினார். மேலும் மத்திய மந்திரி கிரிராஜ் சிங்கைப் பார்த்து இப்படி நடந்து கொள்ளும் உங்களை யார் மத்திய மந்திரி ஆக்கியது என்று கல்யாண் பானர்ஜி கேட்டார். அதற்கு பா.ஜ.க எம்பிக்களும் மத்திய மந்திரி அர்ஜுன்ராம் மேக் வாாலும் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்."எம்.பிக்கள் சபாநாயகரை நோக்கித்தான் பேச வேண்டும். உறுப்பினர்களை நோக்கி பேசக்கூடாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார் அறிவுறுத்தினார்.