சுற்றுலா ஸ்தலமாகிறது லடாக்கில் உள்ள சியாச்சின் மலைப் பகுதிகள்!! பயணிகளைக் கவர இராணுவம் திட்டம்!!

சுற்றுலா ஸ்தலமாகிறது லடாக்கில் உள்ள சியாச்சின் மலைப் பகுதிகள்!! பயணிகளைக் கவர இராணுவம் திட்டம்!!

Update: 2019-09-25 07:02 GMT


சியாச்சின் பனி மலைப் பிரதேசத்தை இந்திய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மத்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து அதிக உயரத்தில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இந்திய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.


அண்மையில் மூத்த ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய ராணுவத் தளபதி பிபின் ராவத், ராணுவம் மற்றும் அது எதிர்கொள்ளும் சவால்களை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்ததாகவும், அந்த அடிப்படையில் சுற்றுலாத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார் .


அதன் ஒரு பகுதியாக சியாச்சின் மலைப் பகுதிகளில் மக்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீரை இரண்டாக  பிரித்து புதிய யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ள லடாக்கில் சியாச்சின் பனிமலைப் பிரதேசம் உள்ளது.


உலகின் மிக உயர்ந்த இடத்தில் உள்ள ராணுவ நிலையும், தீவிர குளிர்ப் பிரதேசமுமான சியாச்சின் இந்திய ராணுவத்தால் ஆண்டு முழுவதும் கண்காணித்து எல்லைப் பகுதிகள் நிர்வகிக்கப்படுகிறது. லடாக் சுற்றுவட்டப் பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் டைகர் ஹில்ஸ் உட்பட கார்கில் போர் நடைபெற்ற இடங்களை சுற்றிப் பார்க்க அனுமதி கோருவதாகவும் ராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


https://www.polimernews.com/dnews/81752/


Similar News