டெர்மினேட்டர் டார்க் ஃபேட் படத்தில் மீண்டும் களத்தில் இறங்கும் ஆர்னோல்டு!!

டெர்மினேட்டர் டார்க் ஃபேட் படத்தில் மீண்டும் களத்தில் இறங்கும் ஆர்னோல்டு!!

Update: 2019-10-23 10:32 GMT

உலகம் முழுதும் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் (Terminator Dark Fate) படம் ஆர்னோல்டு நடிப்பில் நவம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகிறது.
உலகமெங்கும் டெர்மினேட்டர் (Terminator) படத்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்‌ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய டெர்மினேட்டர் படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார் ஆர்னோல்டு சுவார்செனேகர்(Arnold Schwarzenegger).


இன்றும் உலகில் அதிக வசூலை குவித்த படத்தில் டெர்மினேட்டர் படமும் ஒன்று. முதல் மற்றும் இரண்டாம் பாகமும் நிலைத்து நிற்கிறது. இந்த இரண்டு பாகங்களையும் ஜேம்ஸ் கேமரன் (James Cameron) இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் இக்கதையை தயாரித்திருக்கும் இப்படத்தில் டெர்மினேட்டர் ஆக ஆர்னோல்டு சுவார்செனேகர் மீண்டும் நடித்துள்ளார். இந்தியாவில் இப்படத்தை Fox Studios வெளியிடுகிறது.


இப்படம் நவம்பர் 1 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


Similar News