21 ஆயிரம் இஸ்லாமியக் குடும்பங்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு - ஊடகங்கள் முன்பு உடைக்கப்பட்ட காஷ்மீரின் உண்மை நிலை!
21 ஆயிரம் இஸ்லாமியக் குடும்பங்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு - ஊடகங்கள் முன்பு உடைக்கப்பட்ட காஷ்மீரின் உண்மை நிலை!
காஷ்மீரின் எல்லை மாவட்டமான சம்பாவில் வசிக்கும் 21 ஆயிரம் இஸ்லாமியக் குடும்பங்கள், மோடி நடவடிக்கையால் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
மேற்கு பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகள், 1947-ல் பிரிவினையால் தூண்டப்பட்ட மத வன்முறைகளால் ஆயிரக்கணக்கான இஸ்லாமியக் குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து தப்பிச் சென்று, எல்லை மாவட்டமான சம்பாவில் குடியேறினர். பாகிஸ்தான் அகதிகள் என்பதால் அவர்களுக்கு அரசு வேலை, கல்லூரிகளில் சேர்க்கை மற்றும் உதவித்தொகை, நலத்திட்டங்கள் மற்றும் சொந்தமாக நிலம் வாங்கும் உரிமை ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது.
70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிற்குள் நாடற்றவர்களாகவே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மத்திய அரசு, ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகளாக அமலில் இருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக அறிவித்த பின்னர் தற்போது '' மோடி நடவடிக்கையால் மகிழ்ச்சியாக இருக்கிறோம்'' என்று அம்மக்கள் கூறியுள்ளனர்.
எதிர்காலத்தில் கண்ணியமான வாழ்க்கையை எதிர்பார்க்கும் இந்தக் குடும்பங்கள், காஷ்மீர் பிரச்சினையில் ஒரு சரியான முடிவை எடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டுகிறார்கள். இது மத்தியில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் எடுக்க முடியாத ஒரு முடிவு என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டிமா சந்த் என்பவர் கூறுகையில், “பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்கள் எங்களை அங்கு வாழவிடவில்லை. அதனால்தான் நாங்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தோம். ஆனால் இங்கும் அதே நிலைதான் நீடித்தது. எங்கள் குழந்தைகள் கல்வி நிறுவனங்களில் சேர அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் அரசாங்க வேலைகளை கேட்கச் சென்றால், குடியிருப்புச் சான்றிதழ்களை வழங்குமாறு கேட்கிறார்கள்.
சான்றிதழைப் பெறுவதற்காக நான் தாலுக்கா அலுவலகம் செல்லும்போது, நாங்கள் மேற்கு பாகிஸ்தானியர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் எங்குதான் செல்வது?2008 -ம் ஆண்டில், நாங்கள் எங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்காக டெல்லிக்குச் சென்றோம். ஆரம்பத்தில் அவர்கள் எங்களைச் சந்திக்க மறுத்துவிட்டனர். ஆனால் நாங்கள் தொடர்ந்து பல நாட்கள் அங்கேயே தங்கியிருந்ததால் அவர்களைச் சந்திக்க முடிந்தது.