2050 ஆம் ஆண்டுக்குள் ஆசிய காற்றாலைகள் மின்திறன் 10 மடங்கு அதிகரிக்கும்! உலக மின் தேவையில் 3-ல் ஒரு பங்கு கிடைக்கும்

2050 ஆம் ஆண்டுக்குள் ஆசிய காற்றாலைகள் மின்திறன் 10 மடங்கு அதிகரிக்கும்! உலக மின் தேவையில் 3-ல் ஒரு பங்கு கிடைக்கும்

Update: 2019-10-23 03:21 GMT

உலகிலேயே கடலோர காற்றாலை மின் உற்பத்தியில் ஆசியா முன்னிலை வகிக்கிறது. சீனா, இந்தியா, கொரியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் காற்றாலை மின் உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.


கார்பனற்ற, தூய்மையான, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக திகழும் இந்த காற்றாலை மின் உற்பத்தியில் ஆசியாவின் பங்கு அதிகமானதாகும். கடந்த 2018 ஆம் ஆண்டில் இதன் மொத்த உற்பத்தி 230 ஜிகாவாட் (ஜி.டபிள்யூ) ஆகும். வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் இந்த திறன் 2,600 ஜிகாவாட் வரை அதிகரிக்கும், அதாவது கடலோர காற்றாலைகளின் திறன் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் 10 மடங்கு அதிகரிக்கும் என சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பின் (ஐரெனா) புதிய அறிக்கை சென்ற திங்களன்று (அக்டோபர் 21) தெரிவித்துள்ளது.


இந்த உற்பத்தியில் ஆசியா உலகளாவிய தலைமை வகிக்கும் என்றும் 2050 ஆம் ஆண்டளவில் ஆசியாவிற்குள் உற்பத்தி செய்யப்படும்.இந்த உற்பத்தியில் அதிக அளவில் சீன கடலோர மற்றும் கடலற்ற காற்றாலை உற்பத்தியில் முன்னிலை வகிக்கும்( தலா 2000 ஜி.டபிள்யூ ) என்றும் அடுத்ததாக இந்தியா (443 ஜிகாவாட்), கொரியா (78 ஜிகாவாட்) மற்றும் தென்கிழக்கு ஆசியா (16 ஜிகாவாட்) அளவில் உற்பத்தி செய்யும்


இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், காற்றாலை மின் உற்பத்தியால் உலகளாவிய மின் தேவைகளில் மூன்றில் ஒரு பகுதியை ஈடுகட்ட முடியும் என்றும் இதன் மூலம் பாரிஸ் சுற்றுச்சூழல் மாநாட்டு முடிவுகள் படி உலகில் கார்பன் உமிழ்வை குறைப்பதில் வெற்றி அடைய முடியும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  


"புதுப்பிக்கத்தக்க எரி சக்தி மூலம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை-மாற்ற பிரச்சினைகளில் இருந்து தப்பி ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை அடைய முடியும்" என்று ஐரெனாவின் இயக்குநர் ஜெனரல் பிரான்செஸ்கோ லா கேமரா கூறினார்.


காற்றாலை போன்ற குறைந்த விலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்கள் இன்று எளிதில் கிடைக்கின்றன, இது கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான மிகவும் பயனுள்ள மற்றும் உடனடித் தீர்வைக் குறைக்கிறது.


காலநிலை இலக்குகளை பூர்த்தி செய்ய நமக்கு உதவுவது மட்டுமல்லாமல், இது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், இதனால் நிலையான வளர்ச்சியை துரிதப்படுத்தும் "என்றும் பிரான்செஸ்கோ லா கேமரா கூறினார்.


உலகளாவிய காற்றாலைத் தொழில் மூலம் 2030 ஆம் ஆண்டில் 3.7 மில்லியனுக்கும் அதிகமான அதிகமான பேருக்கு வேலை கிடைக்கும், , 2050 ஆம் ஆண்டில் 60 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு வேலை கிடைக்கும் என ஐரெனாவின் அறிக்கை ஆய்வு செய்து கூறியுள்ளது.  


கடலோர காற்றாலைகள் உற்பத்தியை பொறுத்தவரை உலக அளவில் ஆசியாவின் பங்கு 60 சதவீதம் ஆகும். ஐரோப்பிய நாடுகளின் பங்கு 22 சதவீதம் மற்றும் வட அமெரிக்காவின் பங்கு 16 சதவீதம் ஆகும்.


Similar News