கிராம சபை கூட்டத்தில் பதில் சொல்ல முடியாமல் ஓட்டம் பிடித்த பிக்பாஸ் நாயகன் கமல் !

கிராம சபை கூட்டத்தில் பதில் சொல்ல முடியாமல் ஓட்டம் பிடித்த பிக்பாஸ் நாயகன் கமல் !

Update: 2019-10-03 07:33 GMT

நேற்று 150-வது காந்தி ஜெயந்தியை மிக விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கிராமங்களில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. இதை அறிந்த பிக் பாஸ் கமலஹாசன் நிகழ்ச்சியின் இடைவெளியில் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் உள்ள லைட் ஹவுஸ் குப்பம் ஊராட்சியில் நடத்தப்பட்ட கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றார் .


சிலர் துறைமுக விரிவாக்க பணிகளை பற்றி கேள்வி எழுப்பினர். அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார் பல்வேறு கேள்விகளை கமல் முன் எடுத்து வைத்துள்ளார். அதில் அவர் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் கலாச்சாரத்தை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழை தாங்கி பிடிப்பவர் தமிழரின் கலாச்சாரமா பிக் பாஸ் என கேள்வி கேட்டதாகவும் அதற்கு அவர் பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளார் எனவும் அங்கிருந்தவர்கள் சொல்கிறார்கள். அதனை தொடர்ந்து அங்கு கூடி இருந்த மக்கள் நீதி மைய பிரமுகர்களுக்கும் சுமித்ரா குமார் அவர்களுக்கும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் முடியாததால் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்த கமல் நிகழ்ச்சியின் பாதியில் திடீரென அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.


அங்கிருந்தவர்கள் கமலை திடீரென காணவில்லை என தேடி கொண்டிருந்தனர்.


Similar News