"தமிழகத்தில் நாத்திகம் பேசுவோர் தமிழர் எனக் கூறிக்கொள்ள அருகதையற்றோர்" : இலங்கை தமிழ் எம்.பி யோகேஸ்வரன்
"தமிழகத்தில் நாத்திகம் பேசுவோர் தமிழர் எனக் கூறிக்கொள்ள அருகதையற்றோர்" : இலங்கை தமிழ் எம்.பி யோகேஸ்வரன்
தமிழகத்தில் பிரிவினைவாத இயக்கங்கள் அதிகமாகியுள்ள நிலையில், அந்த இயக்கங்கள் இந்திய தாய் நாட்டிற்கு எதிராகவும், ஹிந்து மதத்திற்கு எதிராகவும் வன்மத்தை விதைத்து வருகின்றன. இந்த இயக்கங்கள் இலங்கை தமிழர்களின் பெயரை சொல்லி அரசியல் வியாபாரம் செய்து தமிழர்களை மூளை சலவை செய்து வருகின்றன. அவர்களுக்கெல்லாம் சவுக்கடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் இலங்கை தமிழ் எம்.பி யோகேஸ்வரன்.
தேனி விநாயகர் சதுர்த்தசி விழாவில் இலங்கை தமிழ் எம்.பி யோகேஸ்வரன் பேசியதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் படி, யோகேஸ்வரன் பேசியதாவது : "இலங்கையின் ஆன்மிகத்திற்கு, அஸ்திவாரமிட்டது, தமிழகம். ஆறுமுக நாவலர், திருமூலர் ஆகியோர், இலங்கையை, 'சிவபூமி' என்றழைத்தனர். விநாயகர் சதுர்த்தி விழா, மதம், இனம் ரீதியாக ஒன்றுபடும் நிகழ்வாக உள்ளது.
இலங்கையில் இருப்பவர்கள், ஹிந்து மதத்தில் பற்றோடு உள்ளோம். சைவம் என்றால், தமிழ். தமிழர்என்றால், சைவர்கள்.தமிழகத்தில் நாத்திகம் பேசுவோர், 'தமிழர்' எனக் கூற, அருகதையற்றோர். தமிழகத்தில், ஹிந்து மதம் தழைத்தோங்க வேண்டும்", என்று அவர் பேசியுள்ளார்.