பரிசோதனைக்காக சென்ற மருத்துவர்கள் மீது தாக்குதல்! வைரல் வீடியோ!
பரிசோதனைக்காக சென்ற மருத்துவர்கள் மீது தாக்குதல்! வைரல் வீடியோ!;
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 12 பேருக்கு பாதிப்பு உள்ளது. இதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என சுகாதார மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
டட்பதி பாகல் இந்த பகுதியிலும் இரண்டு பிறகு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்த பகுதியை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியை பரிசோதனை செய்வதற்கு சென்ற சுகாதார பணியாளர்கள் மீது அந்த பகுதி மக்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதனால் அனைவரும் ஓடினர்.
இந்தத் தாக்குதலில் இரண்டு பெண் மருத்துவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரவி வருகிறது.