அயோத்தியில் தொல்லியல் அகழாய்வு அறிக்கை புத்தகமாக கொண்டு வரப்படும் -மத்திய கலை, கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் !
அயோத்தியில் தொல்லியல் அகழாய்வு அறிக்கை புத்தகமாக கொண்டு வரப்படும் -மத்திய கலை, கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் !
அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார்.சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதுகுறித்து நேற்று டெல்லியில் மத்திய கலை, கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத்படேல் கூறும்போது, “ராம ஜென்மபூமி-பாபர் மசூதி கட்டிடம் இருந்த பகுதியில் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையினர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
இதுதொடர்பான ஆய்வு அறிக் கையை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையானது மத்திய அரசு சார்பில் புத்தகமாக விரைவில் வெளியிடப்படும். இந்த அறிக்கையைத் தயாரிக்க பணியாற்றிய அனைத்து தொல்லியல் நிபுணர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்புக்கு தொல்லியல் அகழாய்வு பங்கு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.சர்ச்சைக்குரிய அந்த பாபர் மசூதிக் கட்டிடம் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். அந்தக் கட்டிடத்தின் கீழிருந்து 50 தூண்கள் கண்டெடுக்கப்பட்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.