அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை – பகுதி 1
அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை – பகுதி 1
மேற்கே
கரீபியன் தீவிலிருந்து கிழக்கே வியட்நாம் வரை ராமர் என்பவர் ஒரு
கலாச்சார அடையாளமாக இருந்திருக்கிறார். ராமஜென்ம பூமி வழக்கு என்பது இந்திய வரலாற்றிலேயே மிக
முக்கியமான ஒரு வழக்கு. இந்த வழக்கிற்கு ஒரு நியாயமான தீர்ப்பை பெறாமல் வரலாற்றுத் தவறுகளை திருத்தி அமைக்க
முடியாது. இந்த
வழக்கில் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட மனுவின் அடிப்படையில், ஒட்டுமொத்த ராமஜென்ம பூமி என்பது கோட்
ராமச்சந்திரா கிராமத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த ராம ஜென்மபூமி என்பது ராமர்
பிறந்த இடம். சீதையின் சமையலறை, ராமர், சீதை மற்றும்
லட்சுமணன் ஆகியவர்களின் சிலைகள் இருந்த இடம் என்று
எல்லாவற்றையும் உள்ளடக்கியிருந்தது.
இப்பொழுது இஸ்மாயில் பருகி Vs யூனியன் ஆஃப் இந்தியா 1994 SC SCC 360 வழக்கின் தீர்ப்பு படி
தற்போதைய நிலத்தின் அளவு 130
x 80 ஆக இருக்கிறது.
தற்போதுள்ள
ராமஜென்ம பூமியில் தான் ராமர் பிறந்தார் என்பதற்கான அத்தாட்சியாக நூற்றுக்கணக்கான
வருடங்களாக மக்கள் ராமர் பிறந்த தினத்தைக் கொண்டாடியதற்கான குறிப்புகள் அரசாங்க கோப்புகளில் உள்ளன. நமது கலாச்சாரத்தின் அடிப்படையிலும்
ஹிந்து மக்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்பும்
அந்த இடமே வழிபாட்டிற்குரிய ஒரு பொருளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ராமர் பிறந்தார் என்று நம்பப்படுவதாலேயே அந்த இடம் புனிதத்துவம் உடையதாக கருதப்படுகிறது. அந்த இடத்தில் ராம் லட்சுமணனின் சிலைகள் வைக்கப்படுவதற்கு முன்பதாகவே அந்தத்
தளம் இந்துக்களின் வழிபாட்டுக்குரிய தளம் என்கிற அந்தஸ்தை பெறுவதில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்திய
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 25 இன்
படி இந்து மதத்தில் வழிபாட்டு முறைகள்,
இந்து தர்மத்திற்கு பிரத்தியேகமான
அடிப்படையான பழக்கவழக்கங்கள் பாதுகாக்கப்படுகிறது. அதை நீதிமன்றமோ
இந்து மதத்தில் நம்பிக்கை இல்லாத தனி நபரோ எதிர்க்க முடியாது.
ராமஜென்ம பூமியை பற்றியும், அதில்
ராமர் பிறந்தார் என்பதற்கான ஆதாரத்தையும்
நமது பழங்கால நூல்கள் பல இடங்களில் பதிவு செய்கின்றன.
வால்மீகி ராமாயணத்திலும்,
கந்த புராணத்திலும், நரசிம்ம புராணத்திலும் வசிஷ்ட ஸம்ஹிதையிலும்
ராமர் இந்த குறிப்பிட்ட இடத்தில் பிறந்தார்
என்பதற்கான குறிப்புகளை கொண்டுள்ளன. இந்த இடம் இறைவனின்
இருப்பிடம் என்றும்,
இந்த இடத்தை பார்த்தாலே ஒருவருக்கு முக்தி கிடைக்கும் என்றும்,
இதிலுள்ள இதைச் சுற்றி அமைந்துள்ள
தீர்த்தங்களின் பெருமையையும் இந்த
இடத்தில் புனிதத்தன் தன்மையையும் பறைசாற்றுகின்றன. ஆகையால் இந்துவாகப் பிறந்த யாவருக்கும் இந்த
இடத்தை புனிதஸ்தலமாக பாவித்து,
மதங்கள் மத கடமைகளை
நிறைவேற்ற உரிமை உண்டு.