50 ஆயிரம் பேர் பலன் பெற்ற 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் - ஆரோக்கிய மந்தன் நிகழ்ச்சியில் பிரதமரின் அறிவிப்பு.!

50 ஆயிரம் பேர் பலன் பெற்ற 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் - ஆரோக்கிய மந்தன் நிகழ்ச்சியில் பிரதமரின் அறிவிப்பு.!

Update: 2019-10-01 17:04 GMT

தேசிய சுகாதார ஆணையத்தின் சார்பாக ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டதன் ஒரு வருட நிறைவு விழா ‘ஆரோக்கிய மந்தன்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இரண்டு நாள் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.


அப்போது ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் குறித்து பேசிய பிரதமர், சுமார் 46 இலட்சம் குடும்பங்கள் நோய்களில் இருந்து விடுபடவும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.


இத்திட்டம் தொடங்கப்பட்டு ஒரு வருடத்தில் மட்டும் 50 ஆயிரம் பேர் பலன் பெற்றுள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் மருத்துவ செலவிற்காக யாரும் நிலத்தையோ, நகைகளையோ விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை என்பதே இந்த திட்டத்தின் வெற்றியாகும்.


இது ஏழைகளுக்கான திட்டம். உலக அளவில் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாக ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உருவெடுத்துள்ளது. இதற்கு காரணமான அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் அர்பணிப்பு தான் காரணம்' என்று பிரதமர் பேசியுள்ளார்.


Similar News