“பேச்சுலர்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!!

“பேச்சுலர்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!!

Update: 2019-10-01 09:58 GMT

ஜீ வி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் படம் “பேச்சுலர்” இதை Axess Film Factory சார்பில் G டில்லி பாபு தயாரிக்க இயக்குநர் சசியின் இணை இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார் . இதன் ஃப்ர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பை தந்தது மற்றும் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நேற்று (செப்டம்பர் 30) ஆரம்பிக்கப்பட்டது .


இயக்குநர் சதீஷ் செல்வகுமார் படத்தை பற்றி கூறியது


படத்தை பற்றி நல்ல எண்ணங்கள் வந்துள்ளது என்று கூறினார். சென்னையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளோம். படத்தின் முக்கிய காட்சிகளை இங்கு பதிவிட்டு மேலும் சில காட்சிகளை கோயம்புத்தூரில் மேற்கொள்ளவுள்ளோம்.


படத்தின் முதலே நடிகர் ஜீ வி பிரகாஷுக்கு கொண்டிருக்கும் ஆர்வம் நல்ல உற்சாகத்தை அளிக்குறது. அவரே படத்தின் டேக்குகளை மீண்டும் கேட்டு நடிக்கிறார் மற்றும் படம் நன்றாக வர வேண்டும் என்பதில் அவர் நல்ல ஆர்வத்துடன் இருக்கிறார்.





சென்னை மற்றும் கோயம்புத்தூரில் சில பகுதிகளை முடித்துவிட்ட பிறகு பெங்களூரில் படத்தின் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.


இன்றைய இளைஞர்களின் காதலை படமாக உள்ளோம் . “பேச்சுலர்” ஒரு காதல் கதை . ஜீ வி பிரகாஷ் கதநாயகனாகவும் திவ்ய பாரதி கதநாயகியாகவும் நடிக்கிறார்கள். ஜீ வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர் மற்றும் எடிட்டிங் ஷான் லோகேஷ் செய்கிறார்.


Similar News