மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவும் இயற்கை மருந்து !

Benefits and side effects of orange.

Update: 2021-09-10 23:58 GMT

ஆரஞ்சு மிகவும் சுவையான மற்றும் பிரபலமான ஒரு சிட்ரிக் பழமாகும், இதில் நல்ல அளவில் வைட்டமின் C உள்ளது. ஆரஞ்சு ஆன்ட்டி ஆக்ஸிடேன்டுகளைக் கொண்டுள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. ஆரஞ்சு பழத்தில் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை நீக்குகிறது. ஆரஞ்சில் வைட்டமின் A மற்றும் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன, இவை முயுகோசல் அடுக்கை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இவை, குருட்டுதன்மையை ஏற்படுத்தும் கண் வியாதிகளைத் தடுக்கின்றன. மேலும், இது கண்கள் ஒளியை உறிஞ்சவும் உதவுகிறது. 


ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் வைட்டமின் C உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இது பொதுவான சளி மற்றும் காது நோய்த்தொற்றுகளின் அபாயத்தை குறைக்கிறது. ஆரஞ்சில் வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இவை மூட்டு வீக்கத்தைக் குறைக்கின்றன. உடலில் ஜெலட்டின் மற்றும் பீட்டா-கிரிப்டாக்சாண்டின் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்க ஆரஞ்சு பழம் உதவுகிறது. இதன் மூலம் எலும்பு தொடர்பான வியாதிகளைத் தடுக்கிறது. ஆரஞ்சில் டி-லிமோனீன் உள்ளது, இது நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோயைத் தடுக்கிறது. 


ஆரஞ்சு பழம், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. எனினும், சில சமயங்களில் இது சில பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆரஞ்சு பழம் நன்மை பயக்கிறது. எனினும், கட்டுப்பாடற்ற முறையில் ஆராஞ்சை உட்கொள்ளும் போது, இது உடலுக்கு சில தீங்குகளை விளைவிக்கும். ஆரஞ்சில் உள்ள நார்ச்சத்துகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. எனினும், ஆரஞ்சு பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் பிடிப்புகள் மற்றும் வயிற்று வலி ஏற்படுகிறது. தீக்காயங்கள் ஏற்பட்டவர்கள், ஆரஞ்சு பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 

Input & image courtesy:Logintohealth

 


Tags:    

Similar News