திரையரங்கில் வெறும் நான்கே பேர், 'பிகில்' காட்சியை ரத்து செய்த பிரபல சென்னை தியேட்டர்!

திரையரங்கில் வெறும் நான்கே பேர், 'பிகில்' காட்சியை ரத்து செய்த பிரபல சென்னை தியேட்டர்!

Update: 2019-11-01 01:56 GMT

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்தது ஏ.ஜி.எஸ் நிர்வாகம். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.


இந்நிலையில், நேற்று(அக்டோபர் 31) மதியம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி பாரடைஸ் திரையரங்கில் கூட்டம் மிகக் குறைவாக இருந்ததால், அதில் டிக்கெட் புக் செய்தவர்கள் அனைவரையும் தேவி திரையரங்கில் படம் பார்க்க உட்கார வைத்துள்ளனர். வழக்கமாக ஒரு காட்சி திரையிட வேண்டும் என்றால், 30 டிக்கெட்களாவது இருக்க வேண்டுமாம். அதைவிட தேவி பாரடைஸ் திரையரங்கில் குறைவாகவே இருந்துள்ளது.


மாலையில் இரண்டு திரையரங்கிலும் ‘பிகில்’ திரையிடப்படும் என்றும், இரவுக் காட்சிக்கு டிக்கெட்கள் குறைவு என்பதால் அதிலும் மாற்றம் இருக்கும் எனவும் திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது வழக்கமான நடைமுறை என்றும், எப்படி இந்தத் தகவல் வெளியே தெரிந்தது எனத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளது. உலகளவில் நல்ல வசூல் செய்து வரும் படத்துக்கு, சென்னையின் முக்கியத் திரையரங்கில் இந்த நிலை என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Similar News