பிகில் படத்தின் வியாபாரத்தை உயர்த்த திட்டமிடப்பட்ட சதி -கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா.!

பிகில் படத்தின் வியாபாரத்தை உயர்த்த திட்டமிடப்பட்ட சதி -கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா.!

Update: 2019-10-26 06:57 GMT


கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா இன்று கிருஷ்ணகிரிக்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-


பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி வெளியிட 5 மணிக்கு தான் அரசு அனுமதி அளித்தது. ஆனால் ரசிகர்கள் நள்ளிரவிலேயே தியேட்டருக்கு வந்து பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சம்பவ இடத்தில் சிக்னல்கள், பேரிகார்டர், சி.சி.டி.வி. கேமராக்களை ரசிகர்கள் உடைத்து உள்ளனர்.





கிருஷ்ணகிரி பகுதி மிகவும் அமைதியான ஏரியா, ஆனால் ரசிகர்கள் வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.


இது படத்தின் வியாபாரத்தை உயர்த்த திட்டமிடப்பட்ட சதி போன்று தெரிகிறது. இந்த சம்பவத்தில் ரசிகர்கள் போர்வையில் மர்ம நபர்கள் வேறு யாராவது ஈடுபட்டு உள்ளனரா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றோம்.


Similar News