மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் ஆகப்போகிறதாம்!! அம்மாவின் குணத்தை பிரதிபலிக்கப் போகிற நடிகை யார் தெரியுமா??

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் ஆகப்போகிறதாம்!! அம்மாவின் குணத்தை பிரதிபலிக்கப் போகிற நடிகை யார் தெரியுமா??

Update: 2019-09-05 11:22 GMT


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை ஏராளமான சோதனைகளை கடந்து வந்த பாதையாகும். அவர் அனுபவித்த நல்லது, கெட்டது என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி அவரைப் பற்றிய படம் ஓன்று வெளியாக உள்ளது.


அவரது வாழ்க்கை கதையை வெப் சீரிஸாக கௌதம் மேனன் எடுத்து வருகிறார். 


இயக்குநர் A.L.விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெ வாழ்க்கை படத்திற்கு “தலைவி” என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கிறார். அதனால் ஜெயலலிதாவின் அரசியல் பிரச்சாரங்களை கூர்மையாக கவனித்து அவரைப் போலவே பேசி பழகி வருகிறார் என்ற செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. 


தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் தலைவி படத்தை எடுக்க உள்ளனர்.  வருகிற அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையொட்டி, தற்போது எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறுகின்றனர். 


ஜெயலலிதா நடிகையாக வேண்டும் என்று விரும்பிய காலத்தில் இருந்து படத்தின் கதை ஆரம்பிக்க உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார் இயக்குனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை திரையில் காண தமிழக மக்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 


Similar News