ப.சிதம்பரத்திற்கு பிறந்த நாள் பரிசு திகார் சிறை! திகார் சிறையில் பிறந்த நாளை கொண்டாடும் ப.சி
ப.சிதம்பரத்திற்கு பிறந்த நாள் பரிசு திகார் சிறை! திகார் சிறையில் பிறந்த நாளை கொண்டாடும் ப.சி
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர் இதையடுத்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அவர்கள், ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர்.
அந்த தீர்ப்பில் நீதிபதிகள், “இந்த வழக்கு சரியான பாதையில் செல்கிறது. முன்ஜாமின் என்பது அடிப்படை உரிமை கிடையாது. வழக்கு தொடக்க நிலையில் உள்ளது. இந்த நிலையில் முன்ஜாமின் வழங்கினால், அது விசாரணையை பாதிக்கும். இதனால், இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க இயலாது. பொருளாதார குற்றங்களை வேறு வழியில்தான் கையாள வேண்டும். விசாரணை அமைப்புகளுக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.
சி.பி.ஐயின் விசாரணைக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை, வரும் 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும், திஹார் ஜெயிலில் அடைக்கவும் உத்தரவிட்டார்.
திகாரில் சிறையில் பொருளாதார குற்றங்கள் செய்தவர்களுக்கு வழங்கப்படும் சிறை எண் 7, சிதம்பரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 16 ம் தேதி சிதம்பரம் 74 வது பிறந்த நாளை கொண்டாடுவார். எங்கிருந்து தெரியுமா திகாரில் தான். சிதம்பரம், திகார் சிறையில் தான் இருப்பார். அவர் செப்டம்பர் 19 ம் தேதி வரை திகார் சிறையில் தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.