பா.ஜ.க, பஜ்ராங்தள் மற்றும் காஷ்மீர் இந்துக்களை ஐ.எஸ். உளவாளிகள் என்று உளறிக் கொட்டிய திக்விஜய் சிங்!!
பா.ஜ.க, பஜ்ராங்தள் மற்றும் காஷ்மீர் இந்துக்களை ஐ.எஸ். உளவாளிகள் என்று உளறிக் கொட்டிய திக்விஜய் சிங்!!
இந்திய அரசு கவனமாக இல்லாவிட்டால், அவர்கள் 'காஷ்மீரை இழப்பார்கள்' என்று திக்விஜய்சிங் முன்பு கூறியிருந்தார். ஆனால் இப்போது அதே அவருடைய வாய் 370 வது பிரிவை ரத்து செய்த இந்திய அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக லால் சவுக்கிலிருந்து லால் கிலாவுக்கு எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப்போவதாக அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் வழக்கமாக இந்தியாவுக்கு எதிராக சொல்லும் விஷயங்களை அப்படியே ஒலிக்கும் விசித்திரமான போக்கைக் கொண்டவர் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங். பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே தேசத்துக்கு எதிரான சர்ச்சைக்குரிய அறிக்கைகளை அவ்வப்போது வெளியிடுவதில் பெயர் பெற்றவர். இப்போது இன்னும் ஒரு படி மேலே சென்று, இந்தியாவில், பஜ்ரங் தளம் மற்றும் பாஜகவுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. நிதி உதவி அளிப்பதாக உளறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்துக்களை பாகிஸ்தான் உளவாளிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த சிங், முஸ்லிமல்லாதவர்கள் முஸ்லிம்களை விட ஐ.எஸ்.ஐ.க்காக உளவு வேலை பார்க்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
சிங் அடிக்கடி சர்ச்சைக்குரிய பேச்சுக்களை உளறிக் கொட்டுபவராக அறியப்படுகிறார். 26/11 மும்பை தாக்குதல்களை இந்து அமைப்புகளின் சதி என்று அழைத்த காங்கிரஸ் தலைவர்களில் சிங்கும் ஒருவராக இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தால் ‘இந்து பயங்கரவாதம்’ என பிரச்சாரம் செய்த போஜியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக சிங் இருந்தார்.
முரண்பாடுகள் கொண்டவராகவும், பொருத்தமற்றவராகவும் மாறிவிட்ட திக்விஜய்சிங், சமீபத்தில் நடை பெற்ற மக்களவை தேர்தலில் இந்து பயங்கரவாதி என பொய்யாக குற்றம் சாட்டி காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பாஜகவின் வேட்பாளர் சாத்வி பிரக்யாவிடம் பெரும் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால் மன வேதனை அடைந்த சிங் இது போன்ற பொருத்தமற்ற புரளிகளை பரப்பி வருகிறார். இது ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே பல ஆண்டுகளாக காங்கிரஸ் நாட்டில் நடத்தி வரும் அதே 'இந்து பயங்கரவாத' புரளிதான் இது.
ஆனால் சிங்கின் அறிக்கைகள் சோஷியல் மீடியாவில் அவருக்கு மிக பெரிய எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. வேடிக்கையான வகையில் அவருக்கு எதிர்வினைகளையே ஏற்படுத்தியுள்ளது.