என் கொடி பறக்க வேண்டிய இடத்தில் வேற எவன் கொடிடா பறக்கும் - பாகிஸ்தான் கொடி பறந்த இடத்தில் பறக்கப்போகும் இந்திய தேசியக்கொடி.!

என் கொடி பறக்க வேண்டிய இடத்தில் வேற எவன் கொடிடா பறக்கும் - பாகிஸ்தான் கொடி பறந்த இடத்தில் பறக்கப்போகும் இந்திய தேசியக்கொடி.!

Update: 2019-08-10 07:14 GMT

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களை போல சட்ட ரீதியாக இந்தியாவுடன் ஒருங்கிணைந்துள்ளது. அது மட்டுமின்றி மத்திய அரசின் திட்ட பணிகள் அனைத்தும் இனி அம்மாநில மக்களுக்கு நேரடியாக தங்கு தடையின்றி கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


பயங்கரவாதிகளுக்கு பேரிடி:


சிறப்பு அந்தஸ்து மூலம் குளிர் காய்ந்து வந்த பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும், மத்திய அரசின் நடவடிக்கை பேரிடியாக இறங்கி உள்ளது. ஆனால் ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக இந்திய சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் அதிக அளவில் தேசியக் கொடி ஏற்றுவதில்லை. மாறாக பிரிவினைவாதிகள் பாகிஸ்தான் கொடியை ஏற்றுவார்கள். இந்த அட்டூழியங்களுக்கு தற்போது முடிவு கட்டப்பட்டுள்ளது.


இனி வேறு எந்த கொடியும் பறக்காது:


காஷ்மீரில் இனி வேறு எந்த கொடியும் பறக்காது. இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மூவர்ண தேசியக் கொடி பறக்க வேண்டும் என்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசியக் கொடிகள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. காஷ்மீர் மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னா தேசியக் கொடிகளை வினியோகம் செய்து, ஒவ்வொரு தெருவிலும் 15-ந்தேதி காலை கொடி ஏற்றுமாறு கூறி வருகிறார். இதையடுத்து ஜம்மு மற்றும் லடாக் பிராந்தியத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் முக்கிய இடங்களில் கொடி கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன.தேசியக் கொடி ஏற்றிய பிறகு இந்திய தேசிய கீதம் இசைத்து பாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Similar News