சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்திற்கு வாஜ்பாய் பெயர் சூட்டி கௌரவித்த பா.ஜ.க!
சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்திற்கு வாஜ்பாய் பெயரை சூட்டுவது பா.ஜ.க
அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு மக்கள் தலைவர், பொது சேவையில் உறுதியோடு ஈடுபட்டவர். அக்டோபர் 13, 1999 அன்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் அவர் புதிய அரசுக்கு தலைமையேற்றார். 1996-ஆம் ஆண்டு குறுகிய காலத்திற்கு அவர் பிரதமராக இருந்தார். பண்டிட் ஜவஹர்லால் நேரு காலத்திற்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு முறை தொடர்ந்து பதவி ஏற்ற முதல் பிரதமர் இவர்தான். ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வாஜ்பாயின் அரசியல் காலம் 40 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது.
அவர் ஒன்பது முறை மக்களவைக்கும் இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே ஒரு பெரிய சாதனைதான் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்ததில் வாஜ்பாயிக்கு பெரிய பங்கு உண்டு. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பா.ஜ.க தலைவர் ஷிரிஸ் கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் போற்றும் வகையில் பூமியிலிருந்து 392.01 ஒளி ஆண்டு தூரத்தில் ஒரு நட்சத்திரத்திற்கு வாஜ்பாய் அவர்களின் பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும் இந்த நட்சத்திரமானது சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு வாஜ்பாய் பெயரை சூட்டுவதற்கு சர்வதேச விண்வெளி அமைப்பின் பதிவு செய்தோம். இதற்கு பதிவு எண் சி.எக்ஸ் 16408US என்று தரப்பட்டிருக்கிறது நட்சத்திரத்திற்கு வாஜ்பாய் பெயரில் சுற்றுவதற்காக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பதிவு சான்றிதழும் தரப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறுகிறார்.
Input & Image courtesy: Hindu News