திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி திருக்குறள் வழங்கிய பா.ஜ.க ஐடி விங்
திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி திருக்குறள் வழங்கிய பா.ஜ.க ஐடி விங்
தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக திருவள்ளுவர் பற்றி தான் பேச்சு இதற்கு காரணம் தமிழக பா.ஜ.க வின் ட்வீட் இந்த நிலையில்.தமிழக பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக தமிழகம் முழுவதும் இல்லங்கள், திருவள்ளுவர் படங்களை வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது திருக்குறள் கைபுத்தகம் இலவசமாக வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியை இன்று காலை பா.ஜ.க ஐடி விங் அமைப்பாளர் நிர்மல் குமார் தாம்பரம் பகுதியில் திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, திருக்குறள் கைப்புத்தகம் மற்றும் திருவள்ளுவர் படம் வழங்கி தொடங்கி வைத்தார். இதே போல் தமிழகத்தில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.