இதெல்லாம் வேற லெவல் கலாய் ! ஸ்டாலினை பங்கம் செய்த பா.ஜ.க ஐ.டி விங்.!
இதெல்லாம் வேற லெவல் கலாய் ! ஸ்டாலினை பங்கம் செய்த பா.ஜ.க ஐ.டி விங்.!
தற்போது தமிழக பா.ஜ.க திமுக தலைவர் ஸ்டலினை விடாமல் துரத்தி வருகிறது.ஸ்டாலினும் சளைக்காமல் பதில் சொல்லி வருகிறார். திருவள்ளுவரை காவி நிறத்தில் பதிவிட்டு இந்திய அளவில் பேச வைத்தது தமிழக பா.ஜ.க சமூக வலைதள பிரிவு.
இதேபோல் முரசொலி பஞ்சமி நிலம் தொடர்பாக அவ்வப்போது பல கேள்விகளை பா.ஜ.க கேட்டு வருகிறது. இது குறித்து ஸ்டாலின் அவர்கள் நீண்ட கட்டுரை எழுதினார். அதில் மூல பத்திரம் வெளியிடுவார் என எதிர்ப்பக்கப்பட்டது. ஆனால் மூல பத்திரத்தை வெளியிடாமல் உரிய நேரத்தில் வெளியிடுவேன் என தெரிவித்தார் ஸ்டாலின்.
இதை கவனித்த தமிழக பா.ஜ.க தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வடிவேலு காமெடியை வைத்து ஸ்டாலினை பங்கம் செய்துள்ளது.
பா.ஜ.க ஐ.டி விங் புல் பார்மில் இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.