ஸ்டாலினுக்கு விடுமுறை வாழ்த்து சொன்ன பா.ஜ.க.! விழி பிதுங்கிய தி.மு.க!

ஸ்டாலினுக்கு விடுமுறை வாழ்த்து சொன்ன பா.ஜ.க.! விழி பிதுங்கிய தி.மு.க!

Update: 2019-09-02 15:45 GMT

தமிழக பா.ஜ.கவின் டுவிட்டர் கணக்கை பின்பற்றுவோர் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளது. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.


அந்த வாழ்த்து செய்தியில், இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விடுமுறை தின வாழ்த்துக்கள் என கூறி ஸ்டாலின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து உள்ளது பா.ஜ.க தமிழக ட்விட்டர் தளம், சிசி என குறிப்பிட்டு திமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கையும் டேக் செய்துள்ளது.


இதற்கு பதில் தர முடியாமல் திமுகவினர் திணறினர் எதற்காக விடுமுறை தின வாழ்த்து கூறுகிறார்கள் என புரியாமல் தி.மு.க-வின் உடன் பிறப்புகள் தவித்து வருகின்றனர் .


ஸ்டாலின் இந்து பண்டிகைகள் தவிர மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வார், கலைஞர் தொலைக்காட்சியில் இந்துக்கள் பண்டிகைகளின் போது விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி என ஒளிபரப்புவார்கள். இதற்கு பதிலடி தரும் வகையில் பா.ஜ.க ஸ்டாலினுக்கு விடுமுறை தின வாழ்த்துக்கள் கூறியிருப்பது தவறேதுமில்லை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


தற்போது பா.ஜ.க ட்விட்டர் பக்கம் திராவிடகட்சிகள் பாணியிலே அவர்களுக்கு பதிலடி தருகிறது. மிகவும் ஆக்ட்டிவாக செயல்படுகிறது. அதற்கு பதிலடி தர முடியாமல் மற்ற கட்சியினர் விழி பதுங்கி நிற்கின்றனர்.




https://twitter.com/BJP4TamilNadu/status/1168413647187537920

Similar News