அதிமுகவின் வெற்றிக்கு பாஜக பங்களிப்பு முக்கிய காரணம்! பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.!

அதிமுகவின் வெற்றிக்கு பாஜக பங்களிப்பு முக்கிய காரணம்! பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.!

Update: 2019-10-25 06:58 GMT

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுகவின் வெற்றிக்கு பாஜகவின் பங்களிப்பும் ஒரு முக்கிய காரணம் என்றும், பாஜகவை தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர் என்றும், இனி தமிழகத்தில் பாஜக காலம் தான் என பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவுதினத்தையொட்டி அவர்களது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


மராட்டியம், à®¹à®°à®¿à®¯à®¾à®©à®¾ மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி அந்த மாநிலங்கள் வளர்ச்சியை நோக்கி செல்லும். மேலும் தமிழகத்தில் அதிமுக வெற்றிக்கு பாஜக பங்களிப்பும் முக்கியக் காரணம். உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து பொருத்திருந்து பாருங்கள். பாஜகவை தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இனி தமிழகத்தில் பாஜக காலம் தான்.


ப.சிதம்பரம் கைது நடவடிக்கையை எதிர்ப்பதில் என்ன அநியாயம் நடந்துவிட்டது? à®•à®¾à®™à¯à®•à®¿à®°à®¸à¯ கட்சியில் இருப்போர் கொலை செய்தால் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதெல்லாம் எப்படி நியாயம்? à®¤à®µà®±à¯ செய்த அதிகாரிகளையும் ப.சிதம்பரம் காட்டிக் கொடுக்கட்டும்.


ஸ்டாலினுக்கு பிறரை விமர்சிப்பது மட்டுமே வேலை. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு கால நிகழ்வுக்கு யார் காரணமோ? அவர்களுக்கு விரைவில் தக்க பாடம் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


https://www.hindutamil.in/news/tamilnadu/521915-pon-radhakrishnan-interview.html


Similar News