மஞ்சள் காமாலை வராமல் தடுக்க உதவும் மாமருந்து !
Black nightshade benefits.
மணத்தக்காளி கீரையில் சிறந்த மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளையும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் உட்பட எல்லோருமே உட்கொள்ளலாம். மணத்தக்காளி பழங்களை அப்படியே சாப்பிடலாம், மேலும் பல்வேறு சமையல்களில் இந்த மணத்தக்காளி காய்களை சேர்த்தும் சமைக்கலாம். இந்த மணத்தக்காளி சாப்பிடுவதால் நன்மைகள் உள்ளது என்பது தெரியும். என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டது என்பதால் உடலுக்கு நோயெதிர்ப்பு ஆற்றலை வழங்கும். வாய் புற்றுநோய் மற்றும் மார்பு புற்றுநோயை எதிர்த்து போராட மிகவும் உதவியாக இருக்கும். நீரிழிவு நோயை குணப்படுத்த உதவும் இயற்கை மருந்து. உடல் எரிச்சல் உணர்வு போன்றவற்றை எதிர்க்கும் அழற்சி எதிர்ப்பு பண்புககளைக் கொண்டது. ஆஸ்துமா நோய்க்கு இயற்கையாக தீர்வை வழங்கக்கூடியது. அல்சர் நோயைக் குணப்படுத்த உதவியாக இருக்கும்.
தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவியாக இருக்கும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்கு நோயெதிர்ப்பு ஆற்றலை வழங்கும். கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகளைக் குணப்படுத்த்தி உங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள ஏற்றது. மஞ்சள் காமாலை வராமல் தடுக்க உதவும் மாமருந்து. பசியின்மைப் போக்கி உங்களுக்கு பசி உணர்வை உண்டாக்கும். உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க மிகவும் உதவியாக இருக்கும்.
Image courtesy: wikipedia