கொரோனா வைரஸ் பாதிப்பு - நிவாரண நிதி வழங்கிய பாலிவுட் நட்சத்திரங்கள் பிரதமர் மோடி பாராட்டு..

கொரோனா வைரஸ் பாதிப்பு - நிவாரண நிதி வழங்கிய பாலிவுட் நட்சத்திரங்கள் பிரதமர் மோடி பாராட்டு..

Update: 2020-04-01 11:19 GMT

கொரோனா வைரஸ் பாதிப்புக்காக நிதி அளிப்பதில் பாலிவுட் நட்சத்திரங்கள் உண்மை நட்சத்திரங்களாக ஒளிர்கிறார்கள்.

சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் இருந்து உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் இதுவரை 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எட்டு லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இந்தியாவில் பாதுகாக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கும் படி அறிவுத்துப்பட்டுள்ளது.

இதன் இடையே பாலிவுட் நடிகர்கள் ஆன அக்சய்குமார்,கத்ரீனா கைஃப், அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா, விக்கி கௌசல், சாரா அலிகான் மற்றும் பலர் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தங்கள் ட்விட்டர் பதிவில் பாலிவுட் நடிகர்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.அதுல பாலிவுட் திரையில் மட்டும் நட்சத்திரங்களாக வவிளங்காமல் தேசிய நலனிலும் அக்கறை கட்டுவதில் நட்சிதர்களாக திகழ்கிறார்கள். மேலும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.           

Similar News