ஆம்பூருக்கு வெடிகுண்டு மிரட்டல் ! பயங்கரவாதிகள் ஆம்பூரில் பதுங்கலா? போலீசார் அதிரடி சோதனை!!
ஆம்பூருக்கு வெடிகுண்டு மிரட்டல் ! பயங்கரவாதிகள் ஆம்பூரில் பதுங்கலா? போலீசார் அதிரடி சோதனை!!
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியானது.
இந்த நிலையில் நேற்று மாலை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட சிறுது நேரத்தில், ஆம்பூருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேஸ்புக்கில் போட்டோ ஒன்று வெளியானது.
அதில் “குண்டு ஒன்னு வச்சிருக்கேன். ஆம்பூருக்கு வெடிகுண்டு ஒன்னு வச்சு இருக்கேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து ஆம்பூரில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா என்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் ஆம்பூர் நகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை ஆம்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் ஆம்பூர் நகரம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஆம்பூரில் வெடிகுண்டு விடுக்கப்பட்டுள்ளது அமைதியை விரும்பும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.