அமமுகவுக்கு மீண்டும் நல்ல காலம் பொறக்குமா ?? சுப்ரமண்யசாமி கூறிய அதிர்ச்சிகரமான ஆரூடம்!!
அமமுகவுக்கு மீண்டும் நல்ல காலம் பொறக்குமா ?? சுப்ரமண்யசாமி கூறிய அதிர்ச்சிகரமான ஆரூடம்!!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சுப்ரமணிய சுவாமி அவர்கள் கூறியதாவது:
நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றியும் நடப்பு அரசியல் நிலவரம் குறித்தும் அவர் கருத்து கூறினார். திரைப்பட நடிகர்களைக் கூத்தாடிகள் என்று வர்ணித்த சுவாமி, தமிழ்நாட்டுக்காக அவர்களால் எதையுமே செய்ய முடியாது என்று குறிப்பிட்டார்.
அரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவாரா என்பது பற்றிய கேள்விக்கு கருத்துரைத்த சுவாமி, ரஜினி பல தடவை அரசியலுக்கு வரப்போவதாக தெரிவித்தும் இதுவரை ஒன்று கூட நடக்கவில்லை என்றார். ரஜினி புதிய திரைப்படத்தை விரைவில் வெளியிட இருப்பதால் அதன் விளம்பரத்திற்காக அவர் அரசியல் கருத்துகளைத் தெரிவித்து வரக்கூடும் என்றும் சுவாமி கூறினார்.
ரஜினி-கமல் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யப்போவதாக தெரிவித்துள்ளது பற்றி கருத்துரைத்த சுவாமி, இது எல்லாம் தமக்கு அலுத்துப்போய்விட்ட சங்கதி என்றார்.
“அமமுக தலைவியாக இருக்கும் சசிகலாவுக்கு விதிக்கப்பட்டு உள்ள சிறைத்தண்டனை இன்னும் ஓராண்டுக்குள் முடிந்துவிடும். கட்சியைத் திறம்பட நடத்துவதற்கான ஆற்றல் சசிகலாவிடம் இருக்கிறது. அவர் விடுதலையானதும் அதிமுகவினர் நிச்சயம் சசிகலா கட்சியில்தான் இணைவார்கள்,” என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.