ஒட்டுமொத்த இந்திய மக்களின் 17 வருட உழைப்பை திருடி சென்ற ஆங்கிலேயர்கள்: நம்முடைய 45 ட்ரில்லியன் டாலர்கள் சொத்தை கொள்ளையடித்த பிரிட்டிஷ்.!

ஒட்டுமொத்த இந்திய மக்களின் 17 வருட உழைப்பை திருடி சென்ற ஆங்கிலேயர்கள்: நம்முடைய 45 ட்ரில்லியன் டாலர்கள் சொத்தை கொள்ளையடித்த பிரிட்டிஷ்.!

Update: 2019-10-04 14:55 GMT

பிரிட்டிஷ் கொள்ளையர்கள் இந்தியாவில் இருந்து கொள்ளையடித்துச் சென்ற சொத்துக்களின் மதிப்பு சுமார் 45 ட்ரில்லியன் டாலர்கள் என்று அரசியல் ஆர்வலர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். இந்திய ரூபாயில் சொன்னால் 3150 லட்சம் கோடிகள்.


இது நமது பணம். உங்களுக்கும் எனக்கும் நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமான பணம். வெள்ளைக்காரர்கள் வராமல் இருந்திருந்தால் இன்று உலகின் மிகப்பெரிய, மிகவும் வளமான, மிகவும் வளர்ச்சியடைந்த தேசமாக நாம் இருந்திருப்போம். நம்மை சுரண்டி அழித்து நடைப்பிணமாக மாற்றி விட்டு வெளியேறினர் ஆங்கிலேயர்கள்.


இதனை வேறு ஒரு கோணத்திலும் பார்ப்போம். இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வருடத்திற்கு சுமார் 2.6 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது அம்பானி, அதானி முதல் நீங்கள், நான் உட்பட்ட அனைத்து சாமானியர் வரை சம்பாதிக்கும் பணத்தின் மதிப்பு வருடத்திற்கு 2.6 லட்சம் ட்ரில்லியன் டாலர்கள். 45 ட்ரில்லியன் டாலர்கள் கொள்ளை என்றால் 17 வருடங்கள் நமது நாட்டில் உள்ள அனைவரும் சம்பாதிக்கும் ஒட்டுமொத்த மதிப்பு, ஆம், 17 வருடங்கள்!


சிலர் வெள்ளைக்காரன் வந்து தான் இங்கே நமக்கு எல்லாமே கற்றுத் தந்தான் என்று தேசப்பற்று இல்லாமல் பேசி வருகின்றனர். ஆனால் நடந்ததே வேறு. வெள்ளைக்காரன் நமக்கு வேறொரு "பரிசும்" தந்தான். வங்காளத்தில் செயற்கையான பஞ்சத்தை உண்டாக்கி 40 லட்சம் இந்தியர்களை பட்டினிச் சாவில் கொன்றனர் என்று கூறியுள்ளார்.



Similar News