உத்திரபிரதேசத்தில் எஸ்பி , பிஎஸ்பி கட்சி பிரமுகர்கள் கூண்டோடு பறந்து வந்து பா.ஜ.க-வில் இணைய திட்டம்!!
உத்திரபிரதேசத்தில் எஸ்பி , பிஎஸ்பி கட்சி பிரமுகர்கள் கூண்டோடு பறந்து வந்து பா.ஜ.க-வில் இணைய திட்டம்!!
உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி (எஸ்பி), பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) கட்சிகளைச் சேர்ந்த மேலும் சில முக்கிய தலைவர்கள் பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளனர். அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகவும் அக்கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற மாநிலங்களவையில்பாஜக பெரும்பான்மையை நெருங்கி வருகிறது. 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்கள வையில் பெரும்பான்மைக்கு123 உறுப்பினர்கள் அவசியம். ஆனால், பாஜக கூட்டணிக்கு இப்போது 116 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. காங்கிரஸின் சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாதியின் இருவரது ராஜினாமாவால் மூன்று இடங்கள் காலியாகி உள்ளன. இந்த மூன்று இடங்களும் பாஜகவுக்கே செல்லும் என்பதால், கூட்டணியின் பலம் 119 ஆக உயரும்.
இத்துடன் உ.பி.யில் இருந்து மேலும் சில உறுப்பினர்கள் பாஜகவுக்கு தாவ உள்ளதால், பாஜக கூட்டணிக்கு பெரும் பான்மை கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த கட்சித் தாவல் பின்னணியில் பாஜகவின் வளர்ச்சியும், மக்களவை தேர்தலின்போது அகிலேஷ் மற்றும் மாயாவதி ஆகியோர் மேற்கொண்ட சில தவறான நடவடிக்கைகளும் காரணமாகக் கருதப்படுகிறது. இதில் இருவரும் தேர்ந்தெடுத்த வேட்பாளர்களால் பெரும் அதிருப்தி கிளம்பியது.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 2 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில், முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர், பாஜகவில் இணைந்து விட்டார். இவரை அடுத்து ராஜினாமா செய்த சுரேந்திரா நாகரும் விரைவில் பாஜகவில் சேர உள்ளார். இவரைத் தொடர்ந்து சுரேந்திராவின் ஜாட் சமூகத் தலைவர்கள் சிலரும் பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம், ஜாட் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் உ.பி.யின் மேற்குப் பகுதியில் பாஜக வலுப்பெறும் என எதிர்பார்க் கப்படுகிறது.