தமிழக அரசின் ஒரே உத்தரவால் துள்ளிக்குதிக்கும் 'அசோக் லேலண்ட்' நிறுவன ஊழியர்கள் - சிக்கலான நிலையை சிம்பிளாக முடித்து வைத்த திட்டம்!
தமிழக அரசின் ஒரே உத்தரவால் துள்ளிக்குதிக்கும் 'அசோக் லேலண்ட்' நிறுவன ஊழியர்கள் - சிக்கலான நிலையை சிம்பிளாக முடித்து வைத்த திட்டம்!
ஆட்டோமொபைல் துறைகளில் மேற்கொள்ளப்படும் சில மாறுதல் காரணமாக பல பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. ஊழியர்களுக்குக் கட்டாய விடுப்பு வழங்கி வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளன.
அந்த வரிசையில் அசோக் லேலாண்ட் நிறுவனமும், அடிக்கடி ஊழியர்களுக்குக் கட்டாய விடுப்பு வழங்கி வேலையில்லா நாட்களாக அறிவித்து வந்தது. இதனால், ஊழியர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். இந்நிலையில், தமிழக அரசின் உதவியால் தமிழக அரசு வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர உள்ளது.
தமிழக அரசு மக்களின் வசதிக்காகப் பேருந்துகளின் இயக்கத்தை அதிகரித்து வருகிறது. சமீபத்தில், ரூ.109 கோடி மதிப்பீட்டில் 370 புதிய பேருந்துகள் தமிழக அரசு சார்பில் இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு தற்போது 1750 புதிய பேருந்துகளை உருவாக்க உள்ளது. அதற்கான உற்பத்தி வேலையை அசோக் லேலாண்ட் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.